ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு : நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதன்போது, சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி, இன்று (04.01.2024) முதல் எதிர்வரும் 07ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரியே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இத்துடன், மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



