மட்டக்களப்பில் இல்மனைட் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரப்பாட்டம்
மட்டக்களப்பு (Batticaloa), வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் வாகரை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது, மட்டக்களப்பு கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றையதினம் (25.04.2024) நடைபெற்றுள்ளது.
இதன்போது, இயற்கை வளங்களை அழிக்கும் செயற்றிட்டங்கள் தமக்கு வேண்டாம் எனவும் இறால்பண்ணை மற்றும் இல்மனைட் கம்பனிகளை தடைசெய்ய வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொறுப்புக்கூற வேண்டியவர்கள்
மேலும், இத்திட்டங்கள் தொடர்பில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
