யாழில் பண மோசடியில் அரச அதிகாரி: பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் (Jaffna), கொக்குவில் தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், குறித்த தொடருந்து நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொக்குவில் தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய நிலையப் பொறுப்பதிகாரி இருபது இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக தொடருந்து நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலையப் பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பொன்றும் கொக்குவில் தொடருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri