மன்னார் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களின் நடைபயணம்
மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நடைப்பயணம் நேற்றையதினம்(10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கனியமணல் சுரங்கம்
இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
“காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா? முதலாளிகளுக்கானதா? எமது வளத்தை அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி?, எமது நிலங்களும் எமது வளங்களும் எமக்கானதே.
முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம் எதிர்காலத்தையும் சிந்திப்போம். கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல, முழுநாட்டிற்கும் ஆபத்தானது” எனத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
