மஹிந்த ராஜபக்சவை பார்வையிடச் சென்ற சீன தூதுவர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பார்வயைிடச் சென்றுள்ளார்.
விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்ட மூலம் அமலுக்கு வந்த ஒரு நாளிலேயே, சீனத் தூதுவர் இவ்வாறு மஹிந்தவை பார்வையிடச் சென்றுள்ளார்.
சீன தூதரின் விஜயம்
சட்ட மூலத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களை அரசுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, மகிந்த ராஜபக்ச இன்று அந்த இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில் சீன தூதரின் விஜயம் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
சீனத் தூதுவர் மட்டுமன்றி பல்வேறு முக்கியஸ்தர்கள் இன்று காலை முதல் மகிந்தவின் அதிகாரபூர்வ இல்லத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri