பொய் வழக்குகளைப் போட்டு போராட்டங்களை ஒடுக்கும் அநுர அரசு - கஜேந்திரன் ஆவேசம்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples SL Protest
By Rakesh Oct 02, 2026 11:55 AM GMT
Report

மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்காகப் பொலிஸாரும் அரசும் கூட்டுச்சேர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு நீதிமன்றங்களுக்குள் அலைக்கழிப்பதன் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி, போராட்டங்களிலிருந்து மக்களை ஒதுங்கச் செய்யலாம் என்ற அரசின் கனவு ஒருபோதும் நனவாகாது என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று(01.10.2026) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தையிட்டியிலே தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அங்கே ஒரு சட்டவிரோதமான விகாரையை அமைத்துள்ளனர்.

பொய் வழக்குகளைப் போட்டு போராட்டங்களை ஒடுக்கும் அநுர அரசு - கஜேந்திரன் ஆவேசம் | Protest Against Land Acquisition

அந்தக் காணி உரிமையாளர்கள் தங்களின் காணிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தையும் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவையும் திசைதிருப்பவும், சட்டவிரோதக் கட்டுமானங்களைப் பாதுகாக்கவும் அரசும் பொலிஸாரும் இனவாத அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கின்றனர்.

தையிட்டி போராட்டம்

தையிட்டி போராட்டம் தொடர்பாகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில், 5 வழக்குகள் இன்று(02) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தன.

பொய் வழக்குகளைப் போட்டு போராட்டங்களை ஒடுக்கும் அநுர அரசு - கஜேந்திரன் ஆவேசம் | Protest Against Land Acquisition

தையிட்டியிலே நடைபெறுகின்ற போராட்டம் என்பது வெறுமனே அந்த நிலத்தின் காணி உரிமையாளர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. அது வடக்கு, கிழக்கில் பூர்விகமாக வாழும் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கான உரிமைப் போராட்டமாகும்.

ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தப் போராட்டத்துடன் மக்கள் ஒன்றிணைந்து தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 

நிவாரணம் என்ற போர்வையில் பொருட்களின் விலையுயர்வு - முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

நிவாரணம் என்ற போர்வையில் பொருட்களின் விலையுயர்வு - முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

லண்டனில் போராட்டம் படத்தால் அதிர்ந்த அரங்கம் - பாஸ்கரன் கந்தையா நெகிழ்ச்சி

லண்டனில் போராட்டம் படத்தால் அதிர்ந்த அரங்கம் - பாஸ்கரன் கந்தையா நெகிழ்ச்சி



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US