நிவாரணம் என்ற போர்வையில் பொருட்களின் விலையுயர்வு - முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிவாரணம் என்பது விலை அதிகரிப்பாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் கட்சியின் தலைமையகத்தில் இன்று(02.10.2026) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிவாரணங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களின் விலையுயர்வு
மக்கள் நிவாரணம் கிடைக்கப்பெறும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாக உறுதிமொழி வழங்கிய போதிலும் சில வகை எரிபொருட்களுக்கான விலைகளை 10 ரூபாய் 15 ரூபாய் மற்றும் 50 ரூபாய் அரசாங்கம் அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்குவதாக கூறி விலை உயர்த்தும் புதிய நிவாரண திட்டமொன்றை இந்த அரசாங்கம் நாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சிஸ்டம் சேஞ்ச் திட்டத்தில் இதுவும் ஓர் அங்கமாக இருக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாமும் இந்த நாட்டு மக்களும் ஏதேனும் ஒரு பொருளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டால் அந்த பொருளின் விலை குறையும் என்று நினைத்திருந்தோம், எனினும் இந்த அரசாங்கம் அந்த விடயத்தை மாற்றி அமைத்துள்ளது என என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.