ஈரான் மீது கை வைக்காதே! கொழும்பில் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனப் போராட்டம்
சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பில் நேற்று (06.03.2026) கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கவனவீர்ப்புப் போராட்டம்
'பாலஸ்தீனத்தின் நண்பர்கள்' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். "ஈரான் மீது கை வைக்காதே!", "அமெரிக்க - இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்து!", "ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போரைத் தவிர்" போன்ற கோஷங்களைப் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri