மன்னாரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னாரில் விவசாயிகளுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (13.05.2024) மன்னார் மாவட்டசெயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுபோக புலவுக்காணி வழங்கப்படாமையும் அதிகாரிகள் நயவஞ்சக பழிவாங்கும் நோக்கோடு தங்களுக்கு பாரபட்சமாக காணிவழங்கியது தொடர்பாக மனித உரிமைக்கும் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவித்தும் காலப்போக்கில் இவ்வாரான நிலமைகள் விவசாயிகளுக்கு ஏற்ப்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
குறிப்பாக “எம் கால் சேற்றில் உம் கை சோற்றில் எம் உரிமை எமக்கே” கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே, அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்களுக்கு இடம் கொடுக்க இயலாது, அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே" எனும் பல வாசகங்கள் எழுதிய பதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதிநிதி ஒருவரிடம் மகஜர் ஒன்றை வழங்கியிருந்ததுடன் இன்று 13 பிற்பகல்1:00 மணியளவில் தாங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தீர்வினை பெற்று செல்வதாக மாவட்ட செயலகத்தின் முன்பாக விவசாயிகள் அமர்ந்துள்ளனர்.
செய்தி - அ. ராயூகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |