பெல்ஜியத்தில் வன்முறையாக மாறிய கோவிட் கட்டுப்பாடுகள்! பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல்
பெல்ஜியம் அரசாங்கம் விதித்த கோவிட் - 19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரஸஸ் நகரில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதால், பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்ததுள்ளனர்.
போராட்டக்காரர்கள் பெல்ஜிய தலைநகரின் மையப்பகுதி வழியாக ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் தலைமையகத்திற்கு அமைதியான முறையில் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்களின் குழு, "லிபர்டே" (சுதந்திரம்) என்று கோஷமிட்டு பொலிஸாரின் மீது கற்களை வீசத் தொடங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்ததுள்ளனர்.
காளியாட்ட விடுதிகள் மற்றும் உணவகங்களை அணுகுவதற்கு மக்கள் கோவிட்-19 பாஸ்களைக் காட்ட வேண்டும் என்று அக்டோபரில் விதிக்கப்பட்ட விதிகளை எதிர்த்து போராட்டக்காரர்கள் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam