வவுனியாவில் பௌத்தமயமாக்கலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!
வடக்கு - கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது, இன்று(22.04.2026) இடம்பெற்றுள்ளது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
வவுனியா, ஏ9 வீதியில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, பௌத்தமயமாக்களை கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் நீண்டகாலமாக எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri