ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளின் பாதுகாப்பு திறன் குறைவு: சன்ன ஜயசுமன தகவல்
ஃபைசர், மொடர்னா, ஜோன்சன் என்ட் ஜோன்சன் போன்ற கோவிட் தடுப்பூசிகள் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதாக அமெரிக்க ஆராச்சியாளர்கள் குழு நடத்திய ஆராய்ச்சியில் உறுதியாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பயன்படுத்தி செய்த ஆராய்ச்சியில் இருந்து குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த தகவல் அமெரிக்காவில் வெளியாகும் சயன்ஸ் என்ற சஞ்சிகையிலும் வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் வரை 89 வீதமாக இருந்த ஃபைசர் தடுப்பூசியின் பலன் தற்போது 58 வீதமாக குறைந்துள்ளது.
மார்ச் மாதம் 87 வீதமாக காணப்பட்ட மொடர்னா தடுப்பூசியின் பலன் 43 வீதமாக குறைந்துள்ளது.
அத்துடன் கடந்த மார்ச் மாதம் 86 வீதமாக காணப்பட்ட ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசியின் பலன் தற்போது 13 வீதத்தை விடவும் குறைந்துள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam