சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு கடும் பாதுகாப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விசேட பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பை துஸ்பிரயோகம் செய்து சிறைக் கைதியொருவரை விடுதலை செய்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர், கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசேட பாதுகாப்பு
இதன்போது, சந்தேக நபரான துசார உபுல்தெனிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தர்ஷன குருப்பு, தனது கட்சிக்காரருக்கு பாதாள உலகக்கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
சந்தேக நபரின் சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் அவருக்குப் போதுமான பாதுகாப்பு வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
துசார உபுல்தெனிய தற்போதைக்கு விசேட பாதுகாப்பின் கீழ் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
