போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது..! ஜனாதிபதி திட்டவட்டம்

Batticaloa Anura Kumara Dissanayaka Economy of Sri Lanka Drugs
By Rakesh May 21, 2026 02:18 PM GMT
Report

போதைப் பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று(20.05.2026), போதைப்பொருள் பேரழிவுக்கு எதிரான விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குடும்பமாக குடியேறுவதற்கு பொருத்தமான நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

குடும்பமாக குடியேறுவதற்கு பொருத்தமான நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

 பொருளாதார நிர்வாகம்

 ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

நாம் ஓர் அரசு என்ற வகையில் பல பிரதான சவால்கள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். அதில் பலமான பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் சவாலே முதலாவதாகும்.

அண்மைய டிட்வா சூறாவளிப் பேரழிவு மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு என்பன பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது..! ஜனாதிபதி திட்டவட்டம் | Protection Drug Abolished President Announces

இருப்பினும், எமது வலுவான பொருளாதார நிர்வாகத்தின் விளைவாக, இலங்கை வரலாற்றில் அதிகப்படியான நிதியைக் கொண்ட திறைசேரிக் கணக்கொன்று தற்போது நம்மிடம் உள்ளது.

இதனால் தான் சூறாவளிப் பாதிப்புகளுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாவையும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண நிவாரணங்களுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாவையும் ஒதுக்கீடு செய்ய நமக்கு முடிந்தது.

தற்போதைய டொலர் நெருக்கடி தற்காலிகமானது, அதற்கு நாம் வலுவாக முகம் கொடுப்போம். இன்று நமது முதன்மையான நோக்கம், இந்த போதைப்பொருட்களிலிருந்து நமது தாய்நாட்டையும் இளைய தலைமுறையினரையும் விடுவிப்பதாகும்.

அரசியல் பாதுகாப்பு 

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 6 மாத காலத்துக்குள், 21 வயதுக்கும் குறைந்த 5 ஆயிரத்து 122 ஆண் பிள்ளைகளும், 128 பெண் பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வயது, அந்தஸ்து, மதகுருமார்கள் அல்லது சாதாரண பிரஜைகள் என்ற பாகுபாடின்றி இப்பேரழிவு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ளது.

இந்த வியாபாரம் வளர்வதற்கு அரசியல் பாதுகாப்பே முக்கிய காரணமாக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின் மூலம், அந்த அரசியல் பாதுகாப்பை நாம் தற்போது முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்.

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது..! ஜனாதிபதி திட்டவட்டம் | Protection Drug Abolished President Announces

அதிகாரிகள் எந்தவித அழுத்தமுமின்றி கடமையாற்றக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த 6 மாதங்களுக்குள் 1943 கிலோகிராம் ஹெரோயின், 2008 கிலோகிராம் ஐஸ் மற்றும் 40,755 கிலோகிராம் கஞ்சா என்பன எமது பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வழங்கிய தனித்துவமான பங்களிப்பை நான் பாராட்டுகின்றேன்.

போதைப்பொருள் வியாபாரம்

போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பாதாள உலகத்தை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். வெளிநாடுகளில் தங்கியிருந்த 28 பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

சிறைச்சாலைகளுக்கு உள்ளிருந்து செயற்படுபவர்களைக் கட்டுப்படுத்த இவர்களுக்காகவே விசேட சிறைச்சாலைகளை உருவாக்கியுள்ளோம்.

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது..! ஜனாதிபதி திட்டவட்டம் | Protection Drug Abolished President Announces

கடந்த 6 மாதங்களில் 83 - 56 ரகத் துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக விசேட சட்டவரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நாம் எதிர்பார்த்துள்ளோம்.

ஜனாதிபதி முதல் கிராம உத்தியோகத்தர் வரை அனைவரும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்களாவர். சட்டம் நெருங்கும் போது சிலர் பதற்றமடைந்து, ஆட்களைப் பஸ்களில் ஏற்றி வந்து கூச்சலிடுவதால் சட்ட நடைமுறையை முடக்க முடியாது.

சட்டம் வளைந்து கொடுக்காது, அனைவருக்கும் சமமாக நடைமுறைபடுத்தப்படும். தற்போதைய சட்டக் கட்டமைப்பு போதாவிடின் புதிய சட்டங்கள் இயற்றப்படும்.

அத்துடன், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை மிகக் குறுகிய காலத்திற்குள் அழிப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இறுதிப் பகுதிக்கு வந்துள்ளன.

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது..! ஜனாதிபதி திட்டவட்டம் | Protection Drug Abolished President Announces

துறைமுகம், விமான நிலையம் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற எந்த இடத்திற்கும் புலனாய்வு அதிகாரிகள் நுழைவதற்கான அதிகாரம் வழங்கப்படும்.

மாற்றங்களை ஏற்படுத்த அரசு, மத ஸ்தாபனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஆனந்த விஜேபால, சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGallery

கண்ணகி அம்மன் கோவில் சுற்றுபுறங்களில் நிரம்பி கிடக்கும் குப்பைகள் - விசனம் தெரிவித்த பொதுமக்கள்

கண்ணகி அம்மன் கோவில் சுற்றுபுறங்களில் நிரம்பி கிடக்கும் குப்பைகள் - விசனம் தெரிவித்த பொதுமக்கள்

கண்ணகி அம்மன் கோவில் சுற்றுபுறங்களில் நிரம்பி கிடக்கும் குப்பைகள் - விசனம் தெரிவித்த பொதுமக்கள்

கண்ணகி அம்மன் கோவில் சுற்றுபுறங்களில் நிரம்பி கிடக்கும் குப்பைகள் - விசனம் தெரிவித்த பொதுமக்கள்

மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US