கண்ணகி அம்மன் கோவில் சுற்றுபுறங்களில் நிரம்பி கிடக்கும் குப்பைகள் - விசனம் தெரிவித்த பொதுமக்கள்
கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி, குப்பை கூழங்களால் நிரம்பி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு புறங்களிலும் குப்பைகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரம்பி கிடக்கும் குப்பைகள்
இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியால் உடற்பயிற்சிக்காக செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

மேலும், குறித்த காணியில் கொட்டப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்க முடியாத பல்வேறு பொருட்கள் காணப்படுவதாகவும், காணியில் தேங்கி நிற்கின்ற குப்பைகளில் நீர் நிலை தேங்குவதனால், டெங்கு போன்ற நோய்களும் பரவும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கல்முனை மாநகர சபையினர் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன்.. யாழ். பல்கலை விரிவுரையாளர் முன்வைத்த குற்றச்சாட்டு


