உத்தேச 21ம் திருத்தச் சட்டம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
உத்தேச 21ம் திருத்தச் சட்டம் இன்றைய தினம் அமைச்சரவையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அமைச்சரவை அனுமதி
அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு உத்தேச 21ம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உத்தேச 21ம் திருத்தச் சட்ட வரைவு பல சந்தர்ப்பங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்னர் மீண்டும் அமைச்சரவையில் இந்த வரைவுச் சட்டத்தை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்
இன்றைய தினம் 21ம் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றால், வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தேச 21ம் திருத்தச் சட்ட வரைவு வெளியிடப்படும்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட 21ம் திருத்தச் சட்ட வரைவு பல்வேறு திருத்தங்களுடன் இன்று மீளவும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
