பெண் ஒருவருக்கு சொந்தமான சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அதிகாரிகள்
இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியில் பெண் ஒருவருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அவை சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனை மூலம் பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக பணமோசடி சட்டத்தின் கீழ் அவரது கணவருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டன.
பணமோசடி
சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, எஹெலியகொட-இரத்னபுர வீதியை ஒட்டிய 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று காணிகளையும், ஆறு பேர்ச்சஸ் காணியையும் கொள்வனவு செய்துள்ளார்.

அத்துடன் கடையுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடத்தை அந்த நபரின் மனைவி கட்டியதாக தெரியவந்தது. 45 வயதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்தை 7 நாட்கள் வரை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.