பசில் சந்திப்பிற்கு புலம் பெயர் அமைப்புக்களை இரகசியமாக ஏற்பாடு செய்த முக்கியஸ்தர் (Video)
ஜனாதிபதியின் உரையில் மூன்று விடயங்களைப் பார்க்கலாம், குறிப்பாக பொருளாதார பிரச்சினைகள் மாத்திரமே இலங்கையில் இருக்கின்றன, வடக்கு - கிழக்கு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு பொருளாதார விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை கோட்டாபய நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றார் என கொழும்பில் இருக்கும் அரசியற்துறை விரிவுரையாளரும் பத்திரிகையாளருமான அமிர்தநாயகம் நிக்சன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை அரசியலினுடைய தன்மைகள் நாளுக்கு நாள் மாறுபட்டுச் செல்லும் நிலையில், இலங்கை அரச தலைவரின் சிம்மாசன உரை இடம்பெற்றுள்ளது.
அதில் பல விடயங்களை மறைமுகமாக கூறியிருக்கின்றார். மனித உரிமைகள் பற்றியும் பேசியிருக்கின்றார், இலங்கையினுடைய விவசாயம் பற்றியும் பேசியிருக்கின்றார்.
அரசியல் ரீதியாக மக்கள் இதனை எப்படி அவதானிக்கின்றார்கள், இன்று இருக்கக் கூடிய பூகோள அரசியலின் தன்மை எப்படி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் அமிர்தநாயகம் நிக்சன் தெளிவாக விபரிக்கின்றார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
