பிரபல பெண் பொலிஸ் அதிகாரி மோசடி வருமானத்தில் கார் கொள்வனவு! விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையின் பிரபல பெண் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர், மோசடியாக முறையில் கார் ஒன்றைக் கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
பிரபல பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டரான வருணி போகஹவத்த என்பவரே மேற்கண்டவாறு மோசடியான கார் கொள்வனவு நடவடிக்கையில் விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளார்.
வருணியிடம் விசாரணைகள்
வருணி போகஹவத்த முன்னர் கொழும்பு, பொலிஸ் தலைமையகத்தில் மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தார்.
தற்போதைக்கு மாத்தறை கொட்டவில பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பொறுப்பதிகாரியாக அவர் கடமையாற்றுகின்றார்.

இந்நிலையில் அவரது காருக்கு செலுத்த வேண்டிய லீசிங் தவணைக் கட்டணத்தை ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபரொருவர் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து வருணி போகஹவத்தையின் கார் தற்போதைக்கு பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காரைக் கொள்வனவு செய்வதற்கான வருமான மூலங்கள் குறித்து அவர் தெளிவான ஆதாரங்களை முன்வைக்காத நிலையில், அது தொடர்பிலும் வருணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan