தமிழர்களை அடக்குவதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம்! - ராஜபக்சக்களை கடுமையாக சாடிய சந்திரிக்கா
தமிழ்பேசும் தரப்பு மக்களை அடக்குவதற்காகவே ராஜபக்சக்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்பட்டும் வருகின்றது என முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்துச் சேகரிப்பில் தனது ஒப்பந்தத்தை வைத்தது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டுக்கு எதிராக, மக்களுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், ராஜபக்சக்களின் ஆட்சியில் தமிழ்பேசும் தரப்பு மக்களை அடக்குவதற்கே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போதைய ஆட்சிக்காலத்தில் அரசை விமர்சிப்போரைப் பழிவாங்கும் வகையிலும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கின்றோம்.
குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அப்பாவிகளைச் சிறையிலிடுவதற்கும் தற்போது ராஜபக்சக்களுக்கு இந்தச் சட்டம் துணைபோகின்றது.
எனவே, இவற்றை ஏற்றுக்கொள்ள
முடியாது.
தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் அல்லது
தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு அது முழுவதுமாகத் திருத்தியமைக்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam