2008க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரட் விற்க தடை
கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த நபர்களுக்கு சிகரட் விற்பனை செய்வதற்கு நியூசிலாந்து தடைவிதித்துள்ளது. படிப்படியாக புகைப் பழக்கத்தில் இருந்து நாட்டு மக்களை விடுவிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்திற்கு அமைய 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த எவருக்கும் தமது வாழ்நாளில் நியூசிலாந்தில் சிகரட்டை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காது.
இந்த புதிய சட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. புகைப்பழக்கம் காரணமாக ஏற்படும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட சீர்கேடுகள் உட்பட சில விடயங்களை அடிப்படையாக கொண்டு நியூசிலாந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அத்துடன் நியூலாந்து தனது நாட்டை படிப்படியாக புகைப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் புகைத்தலை 5 வீதமாக குறைக்க நியூசிலாந்து உத்தேசித்துள்ளது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri