கடல்சார் நாடுகளின் கூட்டு ஒப்பந்தம்: அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் ஒத்துழைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்கள் இன்று கடல் ஆரோக்கியம் தொடர்பான உலகளாவிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டம்
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் உலகப் பெருங்கடலில் குறைந்தது 30வீதத்தை பாதுகாப்பதன் மூலம் கூட்டாண்மை நாடுகளுக்குத் தேவையான நிதியை வழங்குவதிலும், கடல் பாதுகாப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்தை அடைவதற்கு 500 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ப்ளு பிளானட் என்ற நீலக்கிரகம் நிதியை நிறுவுதல் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக சுற்றுச்சூழல், உணவு மற்றும் நிதியத்தின் இலட்சியங்களை அடைய இருதரப்பு மற்றும் பலதரப்பு மட்டங்களில் பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அந்த திட்டங்களில் ஒன்றான “கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டத்தின்” கீழ் ஆதரவைப் பெறத் தகுதியான நாடாக இலங்கையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டத்துக்கான ஒத்துழைப்புக்காக இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |