இலங்கையில் 33 அரச நிறுவனங்களை கலைக்க நடவடிக்கை!
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட, அரசுக்குச் சொந்தமான 33 நிறுவனங்களை (SOEs) கலைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதியுடன், அரச நிறுவன மறுசீரமைப்புக்கான விசேட பிரிவு கடந்த மார்ச் மாதம் நிதி அமைச்சின் கீழ் நிறுவப்பட்டது.
அத்துடன், தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான நிலுவையிலுள்ள EPF, ETF மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகளைச் செலுத்த 2026 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் ஆறு மாதங்களில்
இதில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 2.8 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 51 பிரதான அரச நிறுவனங்கள் மொத்தமாக 259.3 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளன.
இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஈட்டிய 227.8 பில்லியன் ரூபாகளை விட 31.5 பில்லியன் ரூபாய் அதிகமாகும்.
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam