மன்னாரில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு(Video)
மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் 'கோவிட் ' கொத்தணிகள் உருவாவதைத் தடுக்கும் முகமாக அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,பொலிஸாருக்கு ஆகியோருக்கு 3வது தடுப்பூசியான கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (7) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கோவிட் தடுப்பூசியின் இரண்டு ஊசிகளையும் பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு மேற்படி 3ஆவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாரம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பூஸ்டர்
தடுப்பூசி செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



