மன்னாரில் இதுவரை தடுப்பூசி பெறாதவர்களுக்கு ' சினோபாம்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் இதுவரை கோவிட் தடுப்பூசிகளை பெறாத நபர்கள் மற்றும் கடந்த மாதம் முதல் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் எழுத்தூர் பாடசாலையில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நடவடிக்கை இன்று காலை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனை மற்றும் மன்னார் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன் அடிப்படையில் மன்னார் நகர் பகுதியில் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் இன்றைய தினம் சினோபாம் தடுப்பூசியின் முதல் தடுப்பூசியை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கடந்த மாதம் சினோபாம் தடுப்பூசியில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதுவரை மன்னார் மாவட்டத்தில் 83 வீதமானவர்கள் கோவிட் தடுப்பூசிகளில் இரண்டு தடுப்பூசிகளையும், 68 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
