சுற்றுலா ஹோட்டல்கள் குறித்து கடுமையாகும் நடைமுறை
கடலோரங்களில் அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு சுற்றுலா ஹோட்டல் அல்லது விடுதியும் கடற்கரைக்கு உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கல்கிசை, ஹிக்கடுவை, உணவடுன உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடலோரங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் என்பன அவற்றின் அருகாமையில் இருக்கும் கடற்கரைப் பிரதேசத்தை தங்கள் உரிமையாக அறிவித்து, பொதுமக்கள் அவ்விடத்துக்கு வருகை தருவதை தடை செய்துள்ளன.
கடலோரங்களில் உலவித் திரிவது
இந்நிலையில் அவ்வாறு கடற்கரைப் பகுதியை எந்தவொரு நட்சத்திர ஹோட்டல் அல்லது சுற்றுலா விடுதிகள் உரிமை கோர முடியாது என்று கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
கடலோரங்களில் உலவித் திரிவது பொதுமக்களின் அடிப்படை உரிமை என்றும் அவற்றை மீற எந்தவொரு தனிநபருக்கோ நிறுவனங்களுக்கோ உரிமையில்லை என்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



