அரச நிறுவனங்களில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
அரச நிறுவனங்களின் சில பொறுப்பான அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் வினைத்திறன் அற்றவர்களாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி செயற்படுவதாகவும் அரச உத்தியோகத்தர்கள் தமது தனிப்பட்ட விருப்புக்கேற்ப செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே அரச நிறுவனங்களில் இந்த நிலைமைகளை தடுக்கும் வகையில் மக்களுடன் நெருக்கமாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று நேற்று (19) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மக்களுக்கு திறமையான மற்றும் நட்பு ரீதியான சேவை
இந்த செயலமர்வில் மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த சிறப்பு செயலமர்வில், மக்களுக்கு திறமையான மற்றும் நட்பு ரீதியான சேவையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
