புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை தீர்மானம் குறித்து எழுந்துள்ள சிக்கல்
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் இது முற்றிலும் தவறான செயற்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையானது நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டதாகும். இதனை நாம் வரவேற்கின்றோம்.
இந்த அதிகார சபையானது பெருந்தோட்ட மக்களுக்கு சேவைகளை செய்வதற்கு தேவைப்படுகின்ற ஒரு இயந்திரமாகும்.
எந்த ஒரு பெருந்தோட்ட நிறுவனமும்
அதேசமயம் மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை பொறுத்தவரைக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலத்தினைக்கொண்டு பெருந்தோட்ட நிறுவனங்களினை கட்டுப்படுத்தி மக்களுக்கான சேவைகளையும், அபிவிருத்திகளையும் முன்னெடுத்திருந்தோம்.
ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்பொழுது எதிர்க் கட்சியில் அமர்ந்ததோ அன்றே இந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் அனைத்தும் தங்களது அதிகாரத்தினையும் ஆதிக்கத்தினையும் வலுப்படுத்திக்கொண்டுள்ளது.
மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை பொறுத்தமட்டில் அது பெருந்தோட்ட நிறுவனங்களின் இயந்திரமாகும். அது மக்களுடைய இயந்திரமல்ல!, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டுவந்திருந்தார்கள்.
இதனை செயற்பாட்டுக்கு கொண்டுவந்ததன் பின்னர் எந்த ஒரு பெருந்தோட்ட நிறுவனமும் இயங்க முடியாது நேரடியாக சுதந்திரமாக மக்களுடைய சேவைகளை இலகுப்படுத்தி செய்துக்கொள்வதற்கு அமைவாக செயற்படக்கூடியதாகும்.
நாங்கள் எங்களது தொழிற்சங்க பலத்தினைக்கொண்டு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளோம். தற்போதைய அரசானது இதில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றியுள்ளதென்றால் அது கேள்விக்குறியே!.
மலையக ஆளுங்கட்சி பிரதிநிதிகளும்
நேரடியாக காணி உரிமை/வீடுகளை கட்டுவதற்கான அனுமதி பெறுவது என்பன இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டு செய்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்று சுயாதீனமாக நேரடியாக இயங்கக்கூடிய ஒரு அதிகார சபையாகும்.
இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை சரியாக இயங்குவதில்லை என்றும் அதனால் குறித்த அதிகார சபையினை மூடுவதாக அரசாங்கம் எடுத்த தீர்மானமானது வேடிக்கையான விடயமாகும்.
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு திறைச்சேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தால் மாத்திரமே இயக்க முடியும். மாறாக நிதி இல்லாமல் எவ்வாறு கொண்டு நடாத்த முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பலம்/அதிகாரம் என்னவென்று ஜனாதிபதி அவர்களுக்கு தெரியாமல் இவ்வாறு செயற்படுகின்றார். இதன் காரணமாகவே இது முறையாக இயங்குவதில்லை என்றும், இதனை அமைச்சின் ஒரு பிரிவாக மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையானது ஏனைய நிறுவனங்கள் போன்று அல்ல.
பிரதி அமைச்சரும் மலையக ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் உண்மைக்கும் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் மலையக மக்கள் அதிகப்படியான நம்பிக்கையில் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி உள்ளார்கள்.
மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தீர்த்து வைப்பதற்கும் அதற்கான பதில் வழங்குவதற்கும் திராணி அற்றவர்களாகவும் முதுகெழும்பு இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள் என்றும் குறி்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




