பல் வலிக்காக வைத்தியசாலை சென்ற இளம் பெண் மர்மமான முறையில் மரணம்
மொனராகலை பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதென கணவர் தெரிவித்துள்ளார்.
மொனராகலை சிரி விஜயபுரத்தைச் சேர்ந்த பி. ஷியாமலி மதுஷானி என்ற 24 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அறுவை சிகிச்சை
ஒரு குழந்தையின் தாயான தனது மனைவியின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கணவர் நுவன் லக்மின மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், மருத்துவமனையின் ஆறாவது வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
தனது மனைவியின் மரணத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு கணவன் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்... ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri