பிரித்தானியாவில் அசைவம் உண்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்: ஸ்டார்மரின் நடவடிக்கை என்ன..!
உலகின் பல்வேறு நாடுகளில் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாமிச உணவு சாப்பிடுவதைக் குறைத்தால் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அசைவ உற்பத்தி, பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்கள் பெருமளவில் உற்பத்தியாக காரணமாக உள்ளது.
பருவக்கால மாற்றம்
எனவே, பிரித்தானியாவை சேர்ந்தவர்கள், உண்ணும் மாமிசத்தின் அளவைக் குறைக்குமாறு பிரித்தானிய பிரதமர் வலியுறுத்துவாரா என கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
இருப்பினும், பருவநிலை மாற்றத்தைக் கையாளுதல் என்பதற்கு, மக்கள் தங்கள் சொந்த வாழ்வை எப்படி வாழ்வது என்பதை அவர்களுக்கு சொல்வது என்ற பொருள் அல்ல என பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கும் கடமை என்பது அடுத்த தலைமுறைக்கு அவசியமானது தான்.
ஸ்டார்மரின் பதில்
அதற்காக, தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அவர்களுக்கு சொல்வது அதற்கு சரியான வழி இல்லை என்று ஸ்டார்மர் கூறியுள்ளார்.
நாம் தூய்மை ஆற்றலைப் பெற்று, அதன் மூலமாக பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க இருக்கிறோம் என உறுதியாக நம்புகிறேன். அது அடுத்த தலைமுறைக்கு அவசியமானதும் ஆகும்.
எனவே, அவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை வாழவேண்டும் என கூறுவது என் வேலை அல்ல” என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
