கோவிட் நோயாளிகளால் சுகாதார ஊழியர்களுக்கு பிரச்சினை
கோவிட் வைரஸின் புதிய மாறுபாடு நாட்டில் வேகமாக பரவிவரும் நிலையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்புவதும் சுகாதார ஊழியர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில 900 என்ற எண்ணிக்கையில் கோவிட் நோயாளிகள் கண்டறியப்படும் இலங்கை கோவிட் எச்சரிக்கை நிலை 3 இல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவிட் பரவலில் நாடு இன்னும் பூச்சிய நிலைக்கு செல்லவில்லை என்ற அடிப்படையில் இதை மூன்றாவது அலை என்று கூறமுடியும் என்று இலங்கையின் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே விடுமுறையில், தேவையற்ற பயணங்களில், மத இடங்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் செல்வதை கட்டுப்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீண்ட வார இறுதி நாட்களாக, மே தின வார இறுதியில் வெசாக் மற்றும் பொசன் என்பன இருப்பதால் தேவையற்ற பயணங்கள் செல்லக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை கோவிட் எண்ணிக்கையின் விரைவான உயர்வு தொடர்ந்தால், திருமணங்களில் தற்போது 150 பேர் பங்கேற்கலாம் என்ற எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டியிருக்கும்.
அத்துடன்; இறுதிச் சடங்குகளில் தற்போது 25 என்ற பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை
திருத்த வேண்டியிருக்கும் என்றும் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.;