கபில சந்திரசேனவின் சத்தியக் கடதாசி குறித்து விசாரணை நடத்த வேண்டும்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தனது மரணத்திற்கு முன்னர் வழங்கிய சத்தியக்கடதாசியில் (Affidavit) குறிப்பிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏர்பஸ் விமான குத்தகை விவகாரத்தில், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் குறிப்பிட்ட ஒரு அதிகாரி, தன்னை இருவரின் பெயர்களைக் குறிப்பிடுமாறு கட்டாயப்படுத்தியதாக கபில சந்திரசேன தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் உள்நோக்கத்திற்காக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சாட்சியங்களை இட்டுக்கட்டும் செயல்களில் அதிகாரிகள் ஈடுபடக்கூடாது என ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
வழக்கு விசாரணைகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும். ஆதாரங்களை உருவாக்குவதிலோ அல்லது சாட்சியங்களை திசைதிருப்புவதிலோ யாரும் ஈடுபட முடியாது.
சந்திரசேனவின் சத்தியக்கடதாசியில் உள்ள உண்மைகளை கண்டறிய ஒரு சுதந்திரமான விசாரணை அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan