ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகை
எதிர்வரும் ஒலிம்பிக் (Olympic) போட்டிகளில் இருந்து தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக உலக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை உலக தடகள சம்மேளனம் பெற்றுள்ளது.
தங்கப் பதக்கம்
குறித்த திட்டமானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (Paris) இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து செயல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், போட்டியில் தங்கப் பதக்கம் (Gold Medal) வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கும் 2028ஆம் ஆண்டு முதல் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக உலக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri