நிதி சேகரிப்பு விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள யாழ். பாடசாலை அதிபர்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபரையும், வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளரையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி பாடசாலையில் நிதி சேகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட சிலர் வட்ஸப் (Whatsapp) சமூக ஊடக குழு ஒன்றின் மூலம் மாணவர்களின் பெற்றோரிடம் பணம் பெற்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி (24.04.2024) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிதி சேகரிப்பு
அந்தவகையில் குறித்த பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக நேற்றையதினம் ஒரு தரப்பினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த நிதி சேகரிப்பு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |