பாகிஸ்தானில் கொடூரமாக எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட பிரியந்த! சந்தேகநபர்களுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளராக பணியாற்றி வந்த 48 வயதான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லையென சியல்கோட் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பில் அச்சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரியந்த குமார கொலை தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்களைகுஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 13 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நீர்கொழும்பு நீதித்துறை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் இளங்கரத்ன மற்றும் குருநாகல் நீதி வைத்திய அதிகாரி அஜித் ஜயசிங்க ஆகியோரினால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் பிரியந்தவின் சடலம் உறவினர்களிடம் அஞ்சலிக்காக ஒப்படைக்கப்பட்டதுடன், உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தப்பட்டு கனேமுல்ல பகுதியில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
பிரியந்தவின் சடலம் சற்றுமுன்னர் மண்ணில் புதைக்கப்பட்டது
பாகிஸ்தானில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் - தொடரும் கைதுகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
