பாகிஸ்தானில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் - தொடரும் கைதுகள்
பிரியந்த குமுார தியவட்டன என்ற இலங்கையர் பாகிஸ்தானில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏலவே கைத செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்கள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனைப் பெற்றுக் கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதி அளித்துள்ளார்.
இதேவேளை, நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது பிரியந்த குமாரவை காப்பாற்ற முயற்சித்த நபருக்கு பாகிஸ்தானின் உயரிய விரும் வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் கனேமுல்ல பகுதியில் இடம்பெறவுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்று முன்தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதுடன், பின்னர் அவரது பூதவுடல் கனேமுல்ல - பொக்குண சந்தி - கந்தலியத்த, பாலுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது இல்லத்துக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
