மருத்துவ கல்வி குறித்து தேசிய கொள்கை
நாடடில் மருத்துவ கல்வி தொடர்பில் தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சபை இது குறித்து தீர்மானித்துள்ளது.
நாட்டின் மருத்துவ கல்வியை விஸ்தரிப்பதற்கு முன்னர் தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை தகமைகள்
மருத்துவ கல்வியை விஸ்தரிக்கும் போது தற்போதைய மருத்துவ பீடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவ கல்விக்கான அடிப்படை தகமைகள் மாற்றம் செய்யப்படக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க மருத்துவ பீடங்களில் நிலவி வரும் ஆளணி வளப் பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதிகள் வரையறுக்கப்பட்டுள்ளமை குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நான்கு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.