லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியிலான மீள் நிரப்பலுக்கான புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் , 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீள் நிரப்புவதற்கான விலை பட்டியலை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதிய விலை
இதேவேளை இலங்கையில் 03.05.2024 அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது.
அதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.
அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.1,582 ரூபாவாகும். மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை 740 என அறிவிக்கப்பட்டுள்ளது.


திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
