ஜூனில் களமிறங்கும் ரணில் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க வேண்டுமென அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் குழு கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டிரான் அலஸ் மற்றும் சபை உறுப்பினர்களான நிமல் லான்சா மற்றும் அனுர யாப்பா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல்
இதற்கு முன்னதாக பசில் ராஜபக்சவுடன் (Basil Rajapaksa) ஜனாதிபதியும் அமைச்சரும் நடாத்திய விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan