மேல் மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தனியார் வகுப்பு தடை
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள், தமது மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம் வசூலித்து தனியார் வகுப்புக்களில் கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அநிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கையின் படி, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புக்களை நடத்துவதில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
அதுமாத்திரமன்றி, குறித்த சுற்றறிக்கையில் பாடசாலை மாணவர்களின் பாடசாலை நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் பல்வேறு வெளி இடங்களில் பணம் வசூலித்து மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் குறித்து, வட்டார கல்வி பணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இது தொடர்பில் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கல்வி அமைச்சுக்களால் சுற்றறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 36 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
