மண்ணெண்ணெயில் இயங்கும் தனியார் பேருந்துகள்! கெமுனு விஜேரத்னவின் சர்ச்சைக்குரிய தகவல்
நாட்டில் உள்ள சுமார் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயில் இயங்குவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சர்ச்சைக்குரிய தகவல்
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து அரசிடம் டீசல் ஒதுக்கீடு கோரிய போதிலும், சில பேருந்து உரிமையாளர்கள் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

பயணிகள் பேருந்துகளை மண்ணெண்ணெயில் இயக்குவது ஒரு பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை என்றும், சரியான எரிபொருள் பயன்பாட்டுத் தரங்களிலிருந்து ஏற்றுக்கொள்ள முடியாத விலகல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்திய டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, தினசரி தனியார் பேருந்து சேவைகள் சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
12 முக்கிய பொருளாதாரக் குறிகாட்டிகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் பேருந்துக் கட்டணத் திருத்தம் ஜூலை மாதம் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளுக்கு மத்தியில் பேருந்து சேவைகளைத் தொடர, சங்கம் ஒரு இடைக்காலக் கட்டணச் அதிகரிப்பை தமது சங்கம் கோரியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.