சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் :வெளியான தகவல்
நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சிறைச்சாலைகளில் 12,000ஆம் கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதிகாரிகளின் பற்றாக்குறை
அவர் மேலும் தெரிவிக்கையில், திணைக்களத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறை காணப்படுகின்றது.
மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்கள். சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும், இல்லையெனில் இந்த நாடு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.
சிறைச்சாலை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள். ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகள் நம்பிக்கையை சேதப்படுத்தியிருக்கலாம்.
பாதுகாப்பு
இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன. மெகசின் சிறைச்சாலைக்கு மேல் தொலைபேசிகள் வீசப்படுகின்றன. எமது அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சிறைச்சாலை ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் உள்ளது. தொலைபேசிகள் குறைவாகவே உள்ளன. தற்போது முடிந்தவரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |