சிறைக்கைதிகள் உறவுகளுடன் பேச புதிய திட்டம்! - இராஜாங்க அமைச்சர் லொஹான் தெரிவிப்பு
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை 'சூம்' தொழில் நுட்பத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகச் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் முதல் கட்டமாக, இந்தத் திட்டம் வெலிக்கடை, அங்குனகொலபெலஸ்ஸ, பூஸா உள்ளிட்ட 6 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
கைதிகள் மத்தியில் கோவிட் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டமானது, எதிர்காலத்தில் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளின் சிறை இலக்கம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் 'சூம்'
தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் தமது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பேச
முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri