ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வவுனியா சிறையிலிருந்து கைதி ஒருவர் விடுதலை
நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 73 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 146 சிறைக்கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காகக் குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளில் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவு செய்தவர்களும், 50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் 25 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருப்பவர்களும், சிறார் குற்றங்களுக்காகக் கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்தும் கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரி என்.பிரபாகரன் தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைலாகு கொடுத்துக் குறித்த கைதியைவிடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டே விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
