வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் மரணம்
வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று முன்தினம் (23.11.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த கைதி நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில், எதிர்வரும் 3 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற இருந்த நிலையில் அவர், மரணமடைந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி பதில் நீதவான் த. அருள் சிறைச்சாலைக்கு சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் நடத்தியுள்ளார்.
அத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தை பார்வையிட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
