பூஸ்ஸஅதியுயர் பாதுகாப்பு சிறைக்குள் சிறைக்காவலர் கைது
பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைக்குள் கைபேசியொன்றைக் கடத்திச் செல்ல முற்பட்ட சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் காலி, பூஸ்ஸ சிறை்சசாலை பிரதான வாயில் அருகே நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
பூஸ்ஸ சிறைச்சாலை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருப்பதன் காரணமாக விசேட அதிரடிப்படையினர் அங்கு காவல் மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் சிறைக்குள் பிரவேசிக்கும் போது விசேட அதிரடிப்படையினரால் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் கடமைக்கு சமூகமளிக்க வந்த சிறைக்காவலர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது அந்தச் சிறைக்காவலரின் தொப்பிக்குள் இருந்து கைபேசியொன்றும் அதற்கான சார்ஜர் கேபிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சிறைக்காவலர், மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.






சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
