யாழில் உயிர்க்கொல்லி போதைமாத்திரையுடன் கைதானவர்களுக்கு சிறை (Video)
சிறைத்தண்டனை
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு விளையாட்டரங்க வீதியில் வைத்து உயிர்க்கொல்லி போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும், யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (17.10.2022) முற்படுத்தப்பட்டுள்ளனர்.
மின்சாதனங்கள் விற்பனை செய்யும் போர்வையில் நடமாடும் போதைமாத்திரை விநியோகத்தை குறித்த இளைஞர்கள் முன்னெடுத்து வந்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்தனர்.
குற்றங்களை ஒப்புக்கொண்ட இளைஞர்கள்
விசாரணைகளின் போது இருவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this video



