சிறைக்கைதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வு
நாட்டில் சிறைச்சாலை சனநெரிசல் நிலைமை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலும் காணப்படும் சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தற்பொழுது சுமார் 29000 குற்றவாளிகளும், சந்தேகநபர்களும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஒட்டுமொத்த சிறைச்சாலைகளின் ஊடாக தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் மொத்த எண்ணிக்கை 13241 என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதிலும் காணப்படும் 30 சிறைச்சாலைகளில் சுமார் 19000 சந்தேகநபர்களும், 10000 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறைச்சாலைகளில் நிலவி வரும் சனநெரிசல் நிலைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |