பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்க தேசிய மக்கள் சக்தி திட்டம்
நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களிலும் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மக்கள் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை உள்ளடக்கி பலமான அணிகளை களமிறக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது.
புதிய திட்டங்கள்
மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்பட்ட மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

அங்குள்ள வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை முன்னெடுக்கவும் கட்சியின் செயற்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan