மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னாரில் அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
இதன்போது 24 வருட ஆசிரியர்,அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்க கோரியும், ஆசிரியர்,மாணவர்,பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கக்கோரியும், இலவசக் கல்வியை ராணுவ மயமாகும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய்யக கோரியும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன் ஆரம்பமாகி மன்னார் பஜார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக வீதியை சென்றடைந்தது,அங்கிருந்து மன்னார் நகர சபை வீதியூடாக மீண்டும் மன்னார் வலயக்கல்வி பணிமனை வீதியை சென்றடைந்தது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam